2020ஆம் ஆண்டு இறுதிக்குள் பெய்ஜிங்கில் 47 ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள் கட்டியமைக்கத் திட்டம்!

கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் அதே வேளையில், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்..
2020ஆம் ஆண்டு இறுதிக்குள் பெய்ஜிங்கில் 47 ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள் கட்டியமைக்கத் திட்டம்!


கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் அதே வேளையில், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான கட்டுமானப் பணியும் உத்தரவாதம் செய்யப்படும் என்று பெய்ஜிங்கின் முக்கிய திட்டப்பணிக் கட்டுமான தலைமையகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.

தொடர்பான அனைத்து கட்டுமான நிறுவனங்களும் கோரிக்கையின் படி, சுகாதார மற்றும் தொற்று நோய் தடுப்பு வாரியங்களுடனும் உள்ளூர் அரசுகளுடனும் இணைந்து கூட்டுப் பணி அமைப்பு முறைமையை உருவாக்கியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திட்டத்தின் படி 2020ஆம் ஆண்டு இறுதிக்குள், பெய்ஜிங்கிலுள்ள மொத்தம் 52 ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள், திடல்கள் மற்றும் அடிப்படை வசதிகளின் கட்டுமான திட்டப்பணிகளில் 47 திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும். நிறைவேற்ற விகிதம், 90 விழுக்காட்டை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com