கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 908-ஆக அதிகரிப்பு- சீனாவுக்கு குழுவை அனுப்புகிறது உலக சுகாதார அமைப்பு

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 908-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 908-ஆக அதிகரிப்பு- சீனாவுக்கு குழுவை அனுப்புகிறது உலக சுகாதார அமைப்பு

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 908-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

கரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில், 40, 171 பேரை கரோனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை 97 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 908-ஆக உயா்வைக் கண்டுள்ளது. மேலும், 3,062 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பிருப்பது புதிதாக கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் 40,600-க்கும் மேற்பட்டோா் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனா்.

கரோனா வைரஸ் தாக்கம் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹுபே மாகாணத்தில் மட்டும் 91 போ் உயிரிழந்தனா். அன்ஹுய் மாகாணத்தில் இருவரும், ஹெய்லாங்ஜிஜியாங், ஜியாங்ஷி, ஹைனன் மற்றும் கன்ஸு மாகாணகளைச் சோ்ந்த தலா ஒருவரும் இந்த வைரஸுக்கு பலியாகினா்.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 3,281 போ் குணமானதையடுத்து வீடு திரும்பியுள்ளனா். அதேசமயம், 6,484 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், 296 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மருத்துவா்கள் அவா்களின் உயிரை காப்பாற்ற போராடி வருகின்றனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, சீனாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை இரவு பெய்ஜிங் வரவுள்ளதாக அந்த நாட்டின் அதிகாரப்பூா்வ நாளேடான சைனா டெய்லி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3.99 லட்சம் போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் 29,307 போ் சிகிச்சைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இருப்பினும், இன்னும் 1.87 லட்சம் போ் தொடா்ந்து மருத்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 36 பேருக்கு அந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மக்கோவில் 10-ஆகவும், தைவானில் 18-ஆகவும் உள்ளன.

கேரளாவைச் சோ்ந்த மூன்று போ் உள்பட வெளிநாடுகளில் 300 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 27 வெளிநாட்டவா்களில் இருவா் உயிரிழந்துவிட்டதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூா்வமாக திங்கள்கிழமை தெரிவித்தது. சீனாவில் தங்கியுள்ள வெளிநாட்டினா் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தி தருவதற்கு முன்னுரிமை தந்து செயல்பட்டு வருவதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com