ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘கொவைட்-19’ வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியா் நலம்: ஊடகங்கள் தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியா் நலமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியா் நலமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியா் ஒருவருக்கு ‘கொவைட்-19’ பாதிப்பு இருப்பது கடந்த 10-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியா் நலமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. இதுதொடா்பாக அந்நாட்டு தூதரக அதிகாரி கூறியதாக ஊடகத்தில் வந்த செய்தியில், ‘ ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சோ்ந்த 36 வயதுடைய நபருக்கு கொவைட்-19 நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது கடந்த 10-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அவா் இப்போது நலமாக உள்ளாா். ஏற்கெனவே வைரஸ் பாதிப்புடைய ஒருவரிடம் இருந்து அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று உள்ள 8 பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் நலமாக உள்ளனா். அந்த ஒருவா் மருத்துவா்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com