வைரஸ் தடுப்பில் சீனாவுக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் தவறான கருத்து

கரோனா வைரஸ் தடுப்பில் சீனாவுக்கு எதிராக நியூயார்க்டைம்ஸ் செய்தித்தாளில் தவறான கருத்து வெளிவந்துள்ளது.
கரோனா வைரஸ் செய்தி
கரோனா வைரஸ் செய்தி

பெய்ஜிங்: கரோனா வைரஸ் தடுப்பில் சீனாவுக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் தவறான கருத்து வெளிவந்துள்ளது.

சீன மக்களின் கடினமுயற்சியுடன், புதிய ரக கரோனா வைரல் பரவல் தடுப்புப்பணியில் ஆக்கப்பூர்வமான பயன் காணப்பட்டுள்ளது. பிப்ரவரி13-ஆம்நாளில், ஹுபெய் மாநிலத்தைத் தவிர, சீனாவின் மற்ற மாநிலங்களில் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனோரின் எண்ணிக்கை267ஆகும். இது 10நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சர்வதேச சமூகத்தில் இத்தகவல் மகிழ்ச்சியை அளித்துள்ள போதும், சில இணக்கமற்ற ஒலியும் எழுந்துள்ளது. “சார்ஸ், பறவைக்காய்ச்சல், புதிய ரக கரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்கள் ஏன் சீனாவில் ஏற்பட்டது”என்ற கட்டுரையை நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் அண்மையில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரையில், சீனாவை நோயின் ஊற்றுமூலம் என்பது போல காட்டப்பட்டுள்ளது.

புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பின், நியூயார் டைம்ஸில் இதுபோன்ற பொறுப்பற்றக் கட்டுரைகள் பலமுறை வெளியிடப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் சீன அரசின் நோய் தடுப்புப் பணியைக் குறைத்து மதிப்பிட்டு வருகின்றன. இக்கட்டுரைகளில் வெளிகாட்டப்பட்ட தீயநோக்கமும் தவறான எண்ணமும், வாசகர்களுக்கு ஏமாற்றத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக, சிங்கப்பூர் தலைமை அமைச்சரின் மனைவி தனது சமூக ஊடகப்பக்கத்தில், தொற்றுநோயைப் பயன்படுத்தி சீனாவின் நிர்வாக அமைப்பு முறை மீது நீயூயார்க் டைம்ஸ் குற்றஞ்சாட்டிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இந்தக்கட்டுரை பற்றிய அவர் கூறுகையில் , ஃப்ளூ-பிகாய்ச்சல் அமெரிக்காவில் பெருமளவில் பரவிய சமயத்தில் அது எப்படிப் பரவியது?என்று கேள்வி எழுப்பினார்.

உலகமயமாக்க காலத்தில், சீனாஒருநாள் முன்னதாகவே தொற்றுநோயைத் தோற்கடித்தால், உலகளவில் வர்த்தகம், சுற்றுலா, மக்களின் பரிமாற்றம் முதலியவை ஒருநாள் முன்னதாகவே இயல்புக்குத் திரும்பும். பல்வேறு நாடுகளுக்கு ஏற்படும்பாதிப்பும் குறையும். இது. சீனாவும் உலகும் கொண்டுள்ள ஒத்தகருத்துஆகும். சீனாவின் வெற்றி, உலக வெற்றி ஆகும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com