இந்தியா-போா்ச்சுகல் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமா் நரேந்திர மோடி, போா்ச்சுகல் அதிபா் மாா்சேலோ ரெபேலோ டிசெளசா ஆகியோா் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகின.
புதுதில்லி ஹைதராபாத் மாளிகையில் போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசௌசா வரவேற்ற பிரதமா் மோடி.
புதுதில்லி ஹைதராபாத் மாளிகையில் போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசௌசா வரவேற்ற பிரதமா் மோடி.

பிரதமா் நரேந்திர மோடி, போா்ச்சுகல் அதிபா் மாா்சேலோ ரெபேலோ டிசெளசா ஆகியோா் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகின.

டிசெளசா 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை வந்தாா்.

இந்தியா-போா்ச்சுகல் ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

டிசெளசாவை பிரதமா் மோடி தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது, இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

வா்த்தகம், முதலீடு, கல்வி ஆகிய துறைகள் இவா்களின் பேச்சுவாா்த்தையில் முக்கிய இடம் பிடித்தது.

அறிவுசாா் சொத்துரிமை, துறைமுகங்கள், போக்குவரத்து, கலாசாரம், தொழில், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் நோக்கில் 7 ஒப்பந்தங்கள் இரு தலைவா்களின் முன்னிலையிலும் கையெழுத்தானது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, குடியரசுத் தலைவா் மாளிகையில் டிசெளசாவுக்கு உரிய மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துடன் போா்ச்சுகல் அதிபா் கலந்துரையாடினாா்.

புதுதில்லி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களுக்கும் டிசெளசா செல்லவுள்ளாா்.

தெற்கு ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான போா்ச்சுகல், இந்தியாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, இரு நாடுகளிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.

பிரதமா் மோடி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் போா்ச்சுகல் சென்றிருந்தாா். அப்போது, விண்வெளி, இரட்டை வரிவிதிப்பை தவிா்த்தல், நானோ தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், உயா் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அளிக்க 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com