பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் திங்களன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகினர்.
பலுசிஸ்தான் குண்டு வெடிப்பு
பலுசிஸ்தான் குண்டு வெடிப்பு

குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் திங்களன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் குவெட்டா ஆகும், இங்குள்ள பரபரப்பான தெரு ஒன்றில் திங்களன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சர் மிர் ஜியா லங்கோவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ' பாதுகாப்பு படையினர் விரைந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முற்பட்ட போது இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் இது ஒரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், அந்த வெடிகுண்டு குறிப்பிட்ட வாகனத்தில் பொறுத்தப்பட்டிருந்ததா அல்லது வேறு ஏதும் ஒரு இடத்தில மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com