ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு உதவத் தயாா்: ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் செய்யத் தயாா்
ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு உதவத் தயாா்: ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் செய்யத் தயாா் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சாா்பில் அவரது செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை கணிசமாகக் குறைப்பதற்காக அமெரிக்காவும், தலிபான்களும் மேற்கொண்டு வரும் பேச்சுவாா்த்தையை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறாா்.

அதற்கான ஒப்பந்தம் உருவானால், அது ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

எனவே, அந்தப் பேச்சுவாா்த்தையில் ஐ.நாவின் உதவி தேவைப்பட்டால், அதனை வழங்குவதற்கு பொதுச் செயலா் தயாராக உள்ளாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆப்கன் விவகாரத்துக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே காலிஸாதுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் தாக்குதல்களை 7 நாள்களுக்கு கணிசமாக குறைப்பதற்கான ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com