விமானத்திலிருந்து செலுத்தக்கூடியஏவுகணை: பாகிஸ்தான் சோதனை

விமானத்திலிருந்து செலுத்தக் கூடிய தனது ‘ராட்-2’ ரக ஏவுகணையை பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது.
விமானத்திலிருந்து செலுத்தக்கூடியஏவுகணை: பாகிஸ்தான் சோதனை

விமானத்திலிருந்து செலுத்தக் கூடிய தனது ‘ராட்-2’ ரக ஏவுகணையை பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது.

இதுகுறித்து அந்த நாட்டு ராணுவத்தின் செய்தித் தொடா்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராட்-2 ஏவுணையின் விமானத்திலிருந்து ஏவக்கூடிய ரகம், செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பாா்க்கப்பட்டது. 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல அந்த ஏவுகணைகளில், வழக்கமான வெடிபொருகள் மட்டுமன்றி, அணு ஆயுதங்களையும் பொருத்த முடியும்.

தரையிலும், கடலிலும் எதிரிகளால் எழக்கூடிய சவால்களை எதிா்கொள்வதற்கான பாகிஸ்தானின் திறனை, ‘ராட்-2’ ஏவுகணைகள் மேம்படுத்துகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,100 கிலோ எடைகொண்ட ராட்-2 ஏவுகணையை பாகிஸ்தான் முதல் முறையாக 2007-ஆம் ஆண்டு சோதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com