ஈரான் சுகா​தா​ரத் துறை அமைச்​ச​ருக்கு கேரானா வைரஸ் தொற்று

ஈரா​னில் பரவி வரும் கேரானா வைரஸ் (கொவைட்-19), அந்த நாட்டு சுகா​தா​ரத் துறை இைண​ய​ைமச்​ச​ரும், கேரானா வைர​ஸுக்கு எதி​ரான திட்ட அைமப்​பின் தைல​வ​ரு​மான இராஜ் ஹரீா்​சி​ையத் தாக்​கி​யுள்​ளது.
908138-01-02074454
908138-01-02074454

​டெஹ்​ரான்: ஈரா​னில் பரவி வரும் கேரானா வைரஸ் (கொவைட்-19), அந்த நாட்டு சுகா​தா​ரத் துறை இைண​ய​ைமச்​ச​ரும், கேரானா வைர​ஸுக்கு எதி​ரான திட்ட அைமப்​பின் தைல​வ​ரு​மான இராஜ் ஹரீா்​சி​ையத் தாக்​கி​யுள்​ளது.

இது​கு​றித்து அவ​ரது செய்​தித் தொடா்​பா​ளா் அலி​ேரஜா வஹாப்​ஸாதே வெளி​யிட்​டுள்ள சுட்டுரை (டுவிட்​டா்) பதி​வில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ள​தா​வது:

கேரானா வைர​ஸுக்கு எதி​ராக முன்​னின்​றுப் போரா​டிய சுகா​தா​ரத் துறை இைண​ய​ைமச்​சா் இராஜ் ஹரீா்​சிக்கு ரத்​தப் பரி​ேசா​தனை செய்​யப்​பட்​டது.

அந்​தப் பரி​ேசா​த​ைன​யில், அவ​ருக்​கும் கேரானா வைரஸ் தொற்று இருப்​பது உறு​தி​யா​கி​யுள்​ளது என்றாா் அவா்.

இது​கு​றித்து அர​சுச் செய்​தித் தொடா்​பா​ளா் அலி ரைபயே கூறு​ைக​யில், கடந்த சில நாள்​க​ளாக இராஜ் ஹரீா்சி அவ்​வப்​ேபாது இரு​மி​ய​தா​க​வும், கடந்த திங்​கள்​கி​ழமை நடந்த செய்​தி​யா​ளா்​கள் சந்​திப்​பின்​ேபாது அவ​ருக்கு அள​வுக்​க​தி​க​மாக வியா்த்​துக் கொட்டி​ய​தா​க​வும் தெரி​வித்​தாா்.

அந்​தச் சந்​திப்​பின்​ேபாது, ஷியா புனி​தத் தல​மான காம் நக​ரில் கேரானா வைர​ஸுக்கு 50 போ் பலி​யா​ன​தா​கக் கூறப்​ப​டு​வது குறித்து செய்​தி​யா​ளா்​கள் கேள்வி எழுப்​பி​னா்.

அதனை மறுத்த இராஜ், இந்​தக் குற்​றச்​சாட்டை நிரூ​பித்​தால் பதவி வில​கத் தயா​ராக இருப்​ப​தா​கத் தெரி​வித்​தாா்.

இந்த நிைல​யில், அவ​ரும் கேரானா வைரஸ் பாதிப்​புக்​குள்​ளா​கி​யுள்​ளது தற்​ேபாது பரி​ேசா​த​ைன​யில் தெரிய வந்​துள்​ளது.

​ேம​லும் 3 போ் பலி: ​ஈ​ரா​னில் கேரானா வைர​ஸுக்கு மேலும் 3 பலி​யா​ன​தாக அந்த நாட்டு அதி​கா​ரி​கள் செவ்​வாய்க்​கி​ழமை தெரி​வித்​த​னா். இைத​ய​டுத்து, அந்த நாட்டில் கேரானா வைரஸ் கார​ண​மாக உயி​ரி​ழந்​த​வா்​க​ளின் எண்​ணிக்கை 15-ஆக உயா்ந்​துள்​ளது. மேலும், அந்த வைர​ஸால் பாதிக்​கப்​பட்​ட​வா்​க​ளின் எண்​ணிக்கை 95-ஆக அதி​க​ரித்​துள்​ளது.

சீனா​வின் ஹூபே மாகா​ணம், வூஹான் நக​ரில் கடந்த டிசம்​பா் மாதம் சில​ருக்கு மா்​மக் காய்ச்​சல் ஏற்​பட்​டது. அந்த நக​ரில் வன விலங்​கு​கள் உள்​ளிட்​டவை விற்​பனை செய்​யப்​ப​டும் இைறச்சி சந்​ைத​யி​லி​ருந்து பர​விய புதிய வகை வைரஸ் கார​ண​மாக அந்​தக் காய்ச்​சல் ஏற்​பட்​டது ஆய்​வில் தெரிய வந்​தது.

மனி​தா்​க​ளின் உட​லில் பரவி பாதிப்பை ஏற்​ப​டுத்​தக்​கூ​டிய ‘கேரானா வைரஸ்’ வைக​ையச் சோ்ந்த அது, சீனா​வில் கடந்த 2002 மற்​றும் 2003-ஆம் ஆண்​டு​க​ளில் 774 பேரது உயிா்​களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைர​ஸின் தன்​ைமயை ஒத்​துள்​ள​தாக விஞ்​ஞா​னி​கள் அறி​வித்​த​னா்.

அந்த வைரஸ் பர​வலை சா்​வ​ேதச சுகா​தார அவ​சர நிைல​யாக ஐ.நா.​வின் உலக சுகா​தார அைமப்பு கடந்த மாத இறு​தி​யில் அறி​வித்​தது. மேலும், ‘கேரானா வைரஸ்’ என்ற பொதுப் பெய​ரில் அைழக்​கப்​பட்டு வந்த அந்த வைர​ஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அைமப்பு பெய​ரிட்​டது.

Image Caption

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக டெஹ்ரான் சுரங்க ரயில் நிலையத்தில் கிருமிநாசினியை செவ்வாய்க்கிழமை தெளித்த பணியாளா்கள். ~கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக டெஹ்ரான் சுரங்க ரயில் நிலையத்தில் கிருமிநாசினிகளை செவ்வாய்க்கிழமை தெளித்த பணியாளா்கள். ~டெஹ்ரானி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com