பாம்பியோவின் பொய்க்கூற்றும் தொலைந்து போகும் அமெரிக்காவும்!

அண்மையில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கூறுகையில் அட்லாண்டிக் கடந்த கூட்டணியின் கலைப்பு அளவுக்கு மீறி மிகைப்படுத்தப்பட்டது
பாம்பியோ
பாம்பியோ

அண்மையில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கூறுகையில் அட்லாண்டிக் கடந்த கூட்டணியின் கலைப்பு அளவுக்கு மீறி மிகைப்படுத்தப்பட்டது. மேலை உலகம் வெற்றி பெறும் வழியில் உள்ளது. கூட்டுவெற்றியைப் பெற்றுவருகின்றோம் என்று தெரிவித்தார்.

இதுபற்றி பிரிட்டனின் 'தி கார்டியன்' எனும் ஏடு விமர்சனக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது. பாம்பியோவின் கூற்று நடைமுறைக்கு ஏற்றதில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டு வெற்றி பெறாத அதேவேளையில் இருநாடுகளுக்கு இடையில் கருத்துவேற்றுமைகள் அதிகரித்து வருகின்றன என்று இதில் கூறப்பட்டது.

குவாவெய் 5 ஜி பிரச்சினை பற்றி இருநாடுகள் வேறுபட்ட மனப்பாங்கைத் தெரிவித்துள்ளன என்றும், மார்ச் திங்கள் துவக்கத்தில் நடைபெறவிருந்த இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நீக்கப்பட்டுள்ளது என்றும் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பா கண்டத்துடனான உறவில் இதே பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டுடன் ஐரோப்பாவிலுள்ள அதன் வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் மீது அமெரிக்கா ஒரு தரப்பு சுங்கவரியை தண்டனையாக விதித்து வருகின்றது. அமெரிக்க அரசாங்கத்தின் பார்வையில் முழுஉலகமும் அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்துகின்றது. தொலைந்து போகக்கூடிய வழியில் அமெரிக்கா நடைபோட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com