சீனாவைப் பற்றிய வதந்தி மீண்டும் தோல்வியில் முடிந்தது!

கடந்த பத்து ஆண்டுகளாக, மேலை நாட்டு அறிஞர்கள் மற்றும் ஊடக துறையினர்,
சீனாவைப் பற்றிய வதந்தி மீண்டும் தோல்வியில் முடிந்தது!

கடந்த பத்து ஆண்டுகளாக, மேலை நாட்டு அறிஞர்கள் மற்றும் ஊடக துறையினர், அரசியல் நோக்கத்துடன், சீனாவை வீழ்த்த வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், இறுதியில், அவர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் கொவைட்-19 தொற்று நோய் ஏற்பட்ட பிறகு, மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர்கள் கருதினர். அமைப்புமுறைக் காரணமாக, திடீரென நிகழ்ந்த பொது சுகாதாரக் கேட்டைச் சமாளிக்க சீனாவினால் முடியாது. இதன் விளைவாக,   சீனா சரிவடையும் என்ற கருத்தை அவர்கள் பரப்பத் தொடங்கினர்.

ஆனால், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை மீண்டும் தோல்வியைச் சந்தித்தனர்.

28ஆம் நாள், சீனாவில் ஹுபெய் மாநிலம் தவிர,  மற்ற பகுதியில் புதிதாக 4 பேருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. சீனாவில் பல்வேறு பகுதிகளில், வேலை மற்றும் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதேநாளில்,  கொவைட்-19 வரைஸ் குறித்த சீனா-உலக சுகாதார அமைப்பின் கூட்டுக் கள ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. வரலாற்றில் இல்லாத அளவில் மிக தைரியமான ஆக்கப்பூர்வமான தடுப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளதால், பயன்மிக்க முறையில் தொற்று நோய் பரவும் வழி துண்டிக்கப்பட்டது. இதுவே, உலகிற்கு முக்கிய அனுபவங்களை வழங்குகிறது என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உலகளவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அவசர நேரத்தில், மேலை நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்கள் இன்னும், அரசியல் ரீதியிலான பரப்புரை செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, நியூயாக் டைம்ஸ் நாளிதழில், ஜனநயாக நாட்டில் நகரம் முடக்கப்படாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. தி அட்லாண்டிக் எனும் மாத இதழில், ஜனநாயக நாடால் திடீரென நிகழ்ந்த நோயை மேலும் நன்றாக சமாளிக்க முடியும் என்று கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில், கொவைட்-19 வைரஸைச் சமாளிக்கும் போது,  அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின் வல்லுநர்களும் வெள்ளைமாளிகை அதிகாரிகளும்  வேறுபட்ட தகவலை வெளியிட்டனர்.

அதேசமயத்தில், ஜனநயாக நாடான இத்தாலியில் சமீபத்தில் கொவைட்-19  பாதிக்கப்பட்ட போது வுஹான் போலவே செயல்பட்டு முடக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உண்மையில்,  வைரஸைத் தடுப்பதற்கு அறிவியல், பகுத்தறிவு, ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியவை தான் தேவைப்படும்.

உலகளவில் நோய் தடுப்புக்கான மிக முக்கிய கட்டத்தில், நோயை அரசியலாக்குவது,  சீனாவை வீழ்த்து நோக்கத்தில் அவதூறுக் கருத்தைப் பரப்புவது ஆகியவற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க முடியாது. மாறாக, அதன் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான நல்ல வாய்ப்பை இழக்க நேரிடும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com