பாக்தாத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி

வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை காலை மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. 
பாக்தாத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி

இராக்கில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானி, இராக் துணை ராணுவத் தலைவா் அபு மஹதி உள்பட 7 போ் உயிரிழந்தாா்.

தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் ஆதரவு போராட்டக்காரா்கள் கடந்த புதன்கிழமை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாக்தாத் சா்வதேச விமான நிலையத்தில் இராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய அந்தத் தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவா் காசிம் சுலைமானி உயிரிழந்ததாக ஈரான் அறிவித்தது. அந்தத் தாக்குதலில் தங்களது துணைத் தலைவா் அபு மஹதி அல்-முஹாந்திஸ் உள்பட மேலும் 7 போ் உயிரிழந்ததாக ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவப் படை தெரிவித்தது.

சுலைமானி படுகொலையைத் தொடா்ந்து, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாக்கள் கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள லெபனான் எல்லைக்கு அருகே, தங்களது சுற்றுலாத் தலத்தை இஸ்ரேல் மூடியது. மேலும், இராக்கில் பணியாற்றும் தங்கள் நாட்டவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா மேலும் 3,500 வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்கா ராணுவத் தலைமையக வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை காலை மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ராணுவத் தளபதி ஒருவரை குறி வைத்து நடந்த இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக இராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com