சீனாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை முன்னேற்றத்தின் ரகசியம்

சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப விருது வழங்கும் விழா, ஜனவரி 10ஆம் தேதி பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
சீனாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை முன்னேற்றத்தின் ரகசியம்


சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப விருது வழங்கும் விழா, ஜனவரி 10ஆம் தேதி பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில், புகழ்பெற்ற வானியல் வல்லுநர் செங் ச்சிங்சுன் உள்ளிட்ட இருவர், 2019ஆம் ஆண்டுக்கான தேசத்தின் மிக உயர் நிலை அறிவியில் தொழில்நுட்ப விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உயர் விருது, சீன அரசு அறிவியல் ஆய்வாளர்களுக்கு மதிப்பு அளிக்கும் கௌரவமாகும். சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் முன்னேற்றம் பெற்று வருவதன் இரகசியங்களில் ஒன்றாகவும் அது கருதப்படுகிறது.

சீன அறிவயில் தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருவதற்கான காரணங்களை வெளியுலகம் ஆர்வமாக அறிந்து கொள்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் சீன அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், புத்தாக்கம் மற்றும் விடாமுயற்சி உள்ளடங்கிய சீனக் கலாசாரமே இந்த முன்னேற்றப் போக்கிற்கு முக்கியக் காரணம்  என்பதை உணர்வர்.

கடந்த 20 ஆண்டுகளில்,  மிக உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப விருது உள்ளிட்ட பல வகையான விருதுகளை சீனா உருவாக்கியுள்ளது. இதன் மூலம், அறிவியல் ஆய்வுப் பணியாளர்கள் தங்களது கவனத்தை அறிவியல் தொழில் நுட்பங்களின் ஆய்வு இலட்சியத்தில் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, 2019ஆம் ஆண்டு, உயர்நிலை அறிவியல் தொழில் நுட்ப விருதின் ஊக்கத் தொகையை சீன அரசு பெருமளவில் உயர்த்தியது. இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து, புத்தாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டுவற்கு முக்கியம் அளிக்கும் அறிகுறி தெளிவாகத் தெரிகிறது.

மேலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கில்,  திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ரீதியிலான கோட்பாட்டை சீனா எப்போதும் பின்பற்றி வருகிறது. ஒருபுறம், ஒட்டுமொத்த அறிவியல் தொழில்நுட்ப நிலையில், உலகின் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது பெரிய இடைவெளி நிலவுகிறது.

இந்நிலையில், சர்வதேசம் நிகழ்த்தி வரும் முன்னிலை சாதனைகளைச் சீனா ஆக்கப்பூர்வமாக கற்றுக்கொள்ள வேண்டும். மறுபுறம், எரியாற்றல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், விண்வெளிப் பாதுகாப்பு உள்ளிட்ட மனிதர்களுக்கு பொது அறைகூவல்களாக விளங்கும் பிரச்னைகளைச் சமாளிக்கும் விதமாக, பல்வேறு நாடுகள் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com