சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் சர்ச்சைக்குள்ளான புகைப்படம்

சிலர் என்ன செய்தாலும் சர்ச்சைக்குள் சிக்குவார்கள். விவாதப் பொருளாகிவிடுவார்கள்.
சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் சர்ச்சைக்குள்ளான புகைப்படம்

சிலர் என்ன செய்தாலும் சர்ச்சைக்குள் சிக்குவார்கள். விவாதப் பொருளாகிவிடுவார்கள். அண்மையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய தோற்றத்துடனான புகைப்படங்களில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியவராகிவிட்டார்.

ஜஸ்டின் ட்ரூடோ சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்களுள் ஒருவர். முதன்முதலில் 2015-இல் கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2019 அக்டோபரில்  மீண்டும் கனடாவின் பிரதமரானார்.  அவரது தந்தை மறைந்த பியர் ட்ரூடோ கனடாவின் 15-வது பிரதமராகவும், 1968-ஆம் ஆண்டு மற்றும் 1984-ஆம் ஆண்டுக்கு இடையில் லிபரல் கட்சியின் தலைவராகவும் விளங்கினார். 

கூகிளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். காரணம் அந்தளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியவர் அவர். 48 வயதான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில்  வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமரின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞரான ஆடம் ஸ்காட்டி தனது இன்ஸ்டாகிராமில் இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ஜஸ்டின் ட்ரூடோ சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தாடியுடன் காணப்பட்டார். இது தமிழ்நாட்டில் தல என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் அஜித் தோற்றத்தைப் போல் இருப்பதாக கனடா வாழ் தமிழர்கள் தங்கள் ட்விட்டர் பதிவுகளில் பாராட்டியுள்ளனர். 

ஆனால் அவரது இந்தப் புதிய தோற்றம் நெட்டிசன்களுக்கு விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. தீவிரமான சிந்தனையில் இருக்கும் ட்ரூடோவின் இந்தப் புதிய தோற்றப் படங்களைக் குறித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பதிவிடுகையில், 'என்ன கூத்து இது! இவரை ஒருபோதும் நம்பமுடியாது.  முதுகில் குத்தும் கோழையான இவரின் அரசியல் கொள்கைகள் சார்புடையவை. பிரெஞ்சுக்காரனைப் போலத்தான் இவரது பேச்சும் செய்கையும் இருக்கும். இவரைப் போன்ற நண்பர்கள் இருந்தால் அவருக்கு எதிரிகளே தேவையில்லை," என்று கடுமையாக விமரிசித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படம் ஒரே சமயத்தில் பாராட்டுக்களையும், விமரிசனங்களையும் சந்தித்து சமூக வலைத்தளங்களை அதிரச் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com