2020ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 4வது ஒத்திகை

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள 2020ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான
2020ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 4வது ஒத்திகை

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள 2020ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 4வது ஒத்திகை ஜனவரி 20ஆம் நாள் இனிதே நடத்தப்பட்டது. ஒளிவீசம் அரங்கும், அற்புதமான நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. 

நடப்பு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள், சீனப் பொது மக்களின் இனிமையான வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. பழைய பாடல்களும் புதிய பாடல்களும் சீனர்களின் மனப்பூர்வமான நாட்டுப்பற்றுணர்வை எடுத்துக்காட்டுகின்றன. 

மேலும், இவ்வாண்டின் புதுமை வாய்ந்த மொழி நிகழ்ச்சிகள் நகைச்சுவைமிக்கவை. சமூக நிலைமை மற்றும் பொது மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் அதேவேளையில், உயர் கலை நிலையையும் காட்டுகின்றன. இவ்வாண்டின் மொழி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகம் என்பது குறிப்படத்தக்கது.

2020ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி ஜனவரி 24ஆம் நாள் நடைபெறவுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com