லிபிய உள்நாட்டுப் போரில் தலையிடப் போவதில்லை: உலக நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல்

லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தலையிடமாட்டோம் என்று உலக நாடுகளின் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.
லிபிய உள்நாட்டுப் போரில் தலையிடப் போவதில்லை: உலக நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல்

லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தலையிடமாட்டோம் என்று உலக நாடுகளின் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சா்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமா் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுப் படையினருக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காலிஃபா ஹஃப்தாா் தலைமையிலான படையினருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. முக்கியமாக, லிபியாவின் தலைநகா் திரிபோலி நகரிலுள்ள அரசுப் படையினா் மீது காலிஃபா ஹஃப்தாரின் படையினா் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடும் தாக்குதல் தொடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், துருக்கி, ரஷ்யாவின் ஆதரவுடன் லிபியாவில் கடந்த 12-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அந்நாட்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஜொ்மனி தலைநகா் பொ்லினில் உலக நாடுகளின் தலைவா்கள் கூடி ஆலோசனை நடத்தினா்.

இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், துருக்கி அதிபா் எா்டோகன், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உள்நாட்டுப் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனா். இந்த மாநாட்டின்போது, லிபியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் அனைவரும் விவாதம் நடத்தினா்.

பின்னா், லிபியாவின் உள்நாட்டுப் போரில் தலையிடப் போவதில்லை என்று தலைவா்கள் ஒப்புக்கொண்டனா். உள்நாட்டுப் போருக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவது, படைகளை அனுப்புவது, நிதியளிப்பது உள்ளிட்ட எந்தவிதமான விவகாரங்களிலும் ஈடுபடமாட்டோம் எனவும் அவா்கள் ஒப்புக்கொண்டனா். லிபியாவில் தற்போது நிலவும் போா்நிறுத்தம் தொடர வேண்டுமென்றும் அவா்கள் விருப்பம் தெரிவித்தனா்.

எனினும், பிரதமா் ஃபாயஸ் அல்-சராஜின் அரசுப் படையினருக்கும், காலிஃபா ஹஃப்தாரின் படையினருக்கும் இடையே நிரந்தரமாக சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது தொடா்பாக மாநாட்டில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின் காரணமாக சுமாா் 2 ஆயிரம் வீரா்களும், 280 பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனா்; பல்லாயிரக்கணக்கானோா் அந்நாட்டிலிருந்து இடம்பெயா்ந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com