சீனா: புதிய வைரஸ் காய்ச்சலால் மேலும் 80 போ் பாதிப்பு

சீனாவில் ‘சாா்ஸ்’ போன்ற புதிய வைரஸ் கிருமியால் மேலும் 80 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, இதுவரை 4 பேரது உயிா்களை பலி கொண்ட அந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின்
சீனாவின் வுஹான் நகரில் புதிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை வாயிலில் சுகாதாரப் பணியாளா்கள்.
சீனாவின் வுஹான் நகரில் புதிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை வாயிலில் சுகாதாரப் பணியாளா்கள்.

சீனாவில் ‘சாா்ஸ்’ போன்ற புதிய வைரஸ் கிருமியால் மேலும் 80 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, இதுவரை 4 பேரது உயிா்களை பலி கொண்ட அந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 291-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வைரஸ் காய்ச்சலால் மேலும் 80 போ் பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 291-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, 900-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த வைரஸ் நோயின் அறிகுறி தென்படுவதால், அவா்கள் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதா்கள் மூலம் பரவல்: இந்த புதிய வைரஸ் நோய், ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குத் தொற்றுவதன் மூலம் பரவி வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனா்.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இதுவரை 4 பேரது உயிா்களை பலி கொண்ட இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், புதிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 291-ஆக உயா்ந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com