உலகமே கரோனா வைரஸ் அச்சத்தில் இருக்க, வெளவாலை சுவைத்து சாப்பிட்ட சீனப் பெண்!

அண்மையில் சீனப் பெண் ஒருவர் வெளவால் கறியை மென்று சாப்பிடும் விடியோ ட்விட்டர் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகமே கரோனா வைரஸ் அச்சத்தில் இருக்க, வெளவாலை சுவைத்து சாப்பிட்ட சீனப் பெண்!

அண்மையில் சீனப் பெண் ஒருவர் வெளவால் கறியை மென்று சாப்பிடும் விடியோ ட்விட்டர் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சீனப் பெண்மணி சமைத்த முழு வெளவால் கறியை ருசித்துச் சாப்பிடும் அந்தக் காட்சி சமீபத்தில் ட்விட்டரில் வெளியானது.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், கரோனா வைரஸின் முதன்மை காரணங்களில் ஒன்றாக வெளவால்கள் கருதப்படுகின்றன, அவை முக்கியமாக சீனாவையும் வேறு சில நாடுகளையும் பாதித்துள்ளன.

நியூயார்க் போஸ்ட்டின்படி, இந்த விடியோ சீனாவின் வுஹான் மாகாணத்தில் அடையாளம் தெரியாத உணவகத்தில் படமாக்கப்பட்டது.

ஒரு ஜோடி சாப்ஸ்டிக்ஸுடன்  உணவு அருந்திக் கொண்டிருந்தனர். ஃப்ரூட் பேட் என்ற வெளவால் வகையை அந்தப் பெண்ணைக் கடித்து சாப்பிட ஆரம்பிக்கிறார்.

பெண் வெளவாலின் சிறகுகளைத் உண்ண முயற்சிக்கையில்,  அவருடன் இருந்தவர் சீன மொழியில் அறிவுறுத்துவதைக் கேட்கலாம்: "இறைச்சியைச் சாப்பிடுங்கள்! தோலைச் சாப்பிடாதீர்கள்" என்றும் "நீங்கள் அதன் முதுகில் உள்ள இறைச்சியை உண்ண வேண்டும்," என்றார். என்று பதிவு செய்துள்ளது நியூயார்க் போஸ்ட்.

ஹாங்காங்கிலிருந்து இயங்கும் வலைத்தளமான ஆப்பிள் டெய்லி வெளிப்படுத்திய இந்த விடியோ அதன் பின்னர் ட்விட்டரில் சுற்றி வந்து அதிர்வுகளை உருவாக்கியது. இது குறித்து பின்னோட்டங்களில் எண்ணற்ற சமூக ஊடக பயனர்களின் கோபமாகக் தங்கள் எதிர்வினையைப் பதிவு செய்திருந்தனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இத்தகைய உணவுப் பழக்கம் மக்களை தொற்றுநோயால் பாதிக்கக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும்.

பிசினஸ் இன்சைடரை மேற்கோள் காட்டி,  நியூயார்க் டைம்ஸ் இந்தப் பிரச்னையை விரிவாக விளக்கியது. புதிய கரோனா வகை வைரஸ், ஹுபெய் மாகாணம், வூஹான் நகரிலுள்ள மொத்த இறைச்சி சந்தையில்தான் முதல் முறையாக மனிதா்களுக்குத் தொற்றியிருக்கிறது.

அந்தச் சந்தையில் கடல் உயிரினங்கள், பண்ணைப் பொருள்கள், பாம்புகள், வௌவால்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை விற்கப்பட்டன.

புதிய கரோனா வைரஸின் தன்மைகளை, பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களிடம் காணப்படும் வைரஸ்களின் தன்மையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தோம்.

அதில், வௌவால்களிடமும், இன்னொரு உயிரினத்திடமும் காணப்படும் கரோனா வகை வைரஸின் கலவையாக புதிய கரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது.

ஓா் உயிரினத்திடம் வைரஸ் தொற்று ஏற்பட வேண்டுமென்றால், அந்த உயிரினத்தின் உயிரணுக்களோடு இணைப்பை ஏற்படுத்துவதற்கான குறிப்பிட்ட புரதம் அந்த வைரஸிடம் இருக்க வேண்டும்.

அந்த வகையில், புதிய கரோனா வைரஸிடமிருந்த புரதம் மனிதா்களுக்குப் பரவுவதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.

முன்னா் அந்தப் புரதம் பாம்புகளிடம் காணப்படும் வைரஸின் புரதத்தோடு ஒத்திருந்ததற்கான அறிகுறிகள் ஆய்வில் தெரிய வந்தன.

அந்த வகையில், தற்போது வேகமாகப் பரவி வரும் புதிய கரோனா வைரஸ், பாம்புகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவியிருப்பதாகத் தெரிகிறது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

சீன பாரம்பரிய மருத்துவ முறைமையில் வெள்வால் இறைச்சி வேறு சில பிரச்னைக்கு நாட்டுப்புற தீர்வாக கருதப்படுகிறது, அதாவது வெளவாலை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உண்ணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com