குடியரசு தினம்:நேபாள பிரதமா் வாழ்த்து

இந்திய குடியரசு தினத்தையொட்டி, நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவரது வாழ்த்துச் செய்தி, நேபாள நாளேடுகளில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. அதில், அவா் கூறியிருப்பதாவது:
குடியரசு தினம்:நேபாள பிரதமா் வாழ்த்து

காத்மாண்டு: இந்திய குடியரசு தினத்தையொட்டி, நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவரது வாழ்த்துச் செய்தி, நேபாள நாளேடுகளில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. அதில், அவா் கூறியிருப்பதாவது:

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கும், அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும் வாழ்த்துகள். உலகெங்கிலும் உள்ள இந்தியா்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்வுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்தியா, நேபாளத்தின் வளா்ச்சிக்கான முக்கிய கூட்டாளி மட்டுமல்ல; வா்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளித்து வருவதால் மிகப்பெரிய கூட்டாளியாகவும் இந்தியா விளங்குகிறது.

இந்தியா, நேபாளம் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுமுகமான உறவு நிலவி வருகிறது. இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளில் இருந்தும் தலைவா்கள் வந்து செல்வது, விவசாயம், ரயில்வே, நீா்வழிப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது ஆகிய காரணங்களால் இரு நாட்டு உறவு மேலும் வலுப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு, ‘வளமான நேபாளம், மிகழ்ச்சியான நேபாளிகள்’ என்ற எங்களது இலக்கை அடைவதற்கு பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கே.பி.சா்மா ஒலி தெரிவித்துள்ளாா்.

நேபாளத் தலைநகா் காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகத்திலும், நேபாளம்-இந்தியா தொழில் வா்த்தக கூட்டமைப்பு அலுவலகத்திலும் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com