சீனாவில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் உலக நாடுகள்

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சீனாவில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
சீனாவில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் உலக நாடுகள்


பெய்ஜிங்: கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சீனாவில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா மற்றும் உலக நாடுகளில் மொத்தம் 6 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில், சீனாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை பத்திரமாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

வுஹான் பகுதியில் இருந்த 206 ஜப்பானியர்களை சிறப்பு விமானம் மூலம் ஜப்பான் அரசு தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது. அவர்களில் சிலருக்கு விமானத்திலேயே காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவும் இருந்துள்ளது. உடனடியாக அவர்களுக்கு டோக்யோ மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

அதில்லாமல், அனைத்து பயணிகளுமே தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

தற்போது சீனாவின் வுஹான் பகுதியில் இருக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும் சிறப்பு விமானத்தை இயக்கி, சீனாவில் இருந்து தங்கள் நாட்டு மக்களை அழைத்துக் கொண்டு திரும்பியுள்ளது. அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், நோய் தொற்று இருந்தால் சிகிச்சை அளிக்கவும் அமெரிக்காவில் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேப்போல, பிரான்ஸ், தென் கொரியா, மங்கோலியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்க உள்ளது.

20,000 முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகளை ஜப்பான் அரசு சீனாவுக்கு வழங்கியுள்ளது. அதேப்போல, சீனாவும் 2500 படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனையை வேகமாகக் கட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com