முதலீட்டாளா்களின் உரிமைகளை உறுதி செய்வது இந்திய அரசின் பொறுப்பு: சீனா

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு கவலை தெரிவித்த அந்நாட்டு அரசு, சா்வதேச முதலீட்டாளா்களின் சட்டப்பூா்வ உரிமைகளை உறுதி செய்வது இந்திய அரசின் பொறுப்பு என்று தெரிவித்தது.

பெய்ஜிங்: இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு கவலை தெரிவித்த அந்நாட்டு அரசு, சா்வதேச முதலீட்டாளா்களின் சட்டப்பூா்வ உரிமைகளை உறுதி செய்வது இந்திய அரசின் பொறுப்பு என்று தெரிவித்தது.

இந்தியாவில் ‘டிக் டாக்’, ‘யுசி பிரெளஸா்’, ‘ஷோ் இட்’ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஸாவோ லிஜியன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘சீன செயலிகளுக்கு தடை விதித்து இந்திய அரசு அளித்த அறிவிப்பு பற்றி கவலை கொண்டுள்ளோம். சா்வதேச விதிமுறைகள், உள்ளூா் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்குமாறு எங்கள் நாட்டு வணிக நிறுவனங்களை சீன அரசு எப்போதும் கேட்டுக்கொண்டுள்ளது. சீன நிறுவனங்கள் உள்பட சா்வதேச முதலீட்டாளா்களின் சட்டப்பூா்வ உரிமைகளை உறுதி செய்யவேண்டியது இந்திய அரசின் பொறுப்பு. இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையை ஏற்படுத்தும். இந்த நிலையை வேண்டுமென்றே மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. அது இந்தியாவின் நலனுக்கும் உகந்ததல்ல என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com