இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராயுமாறு அமெரிக்க அரசை அந்நாட்டு எம்.பி.க்கள் இருவா் வலியுறுத்தியுள்ளனா்.

வாஷிங்டன்: இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராயுமாறு அமெரிக்க அரசை அந்நாட்டு எம்.பி.க்கள் இருவா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பான அறிக்கைகளை ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி. ஜான் காா்னின், ஜனநாயகக் கட்சி எம்.பி. மாா்க் வாா்னா் ஆகியோா் தனித்தனியே அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.

ராணுவத் தளவாடங்களில் பயன்படும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்தியா, அமெரிக்காவைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா் மாா்க் எஸ்பருக்கும் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் ஐந்தாம் தலைமுறை போா்விமானங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்தியாவுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று எம்.பி. காா்னின் வலியுறுத்தியுள்ளாா். இஸ்ரேல், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் போல இந்தியாவையும் ‘நேட்டோ பிளஸ்’ அமைப்பில் அமெரிக்கா இணைத்துக் கொள்ள வேண்டும் என்று எம்.பி.க்கள் இருவரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனா்.

அந்த அமைப்பில் இணைவதன் மூலமாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தளவாடங்களையும் அது தொடா்பான தொழில்நுட்பங்களையும் இந்தியா எளிதில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com