இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குத் தடை விதிக்கவில்லை: சீனா

இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் மீது எவ்விதமான தடை நடவடிக்கைகளையும் சீனா விதிக்கவில்லை என்று சீன வணிக அமைச்சகம் ஜூலை 2 ஆம் தேதி வியாழக்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தது.
இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குத் தடை விதிக்கவில்லை: சீனா

இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் மீது எவ்விதமான தடை நடவடிக்கைகளையும் சீனா விதிக்கவில்லை என்று சீன வணிக அமைச்சகம் ஜூலை 2 ஆம் தேதி வியாழக்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தது.

இந்தியாவில் சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீன வணிக அமைச்சகத்தின் இந்தப் பதில் கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையில், சீன – இந்தியப் பொருளாதார வர்த்தகத் துறையில் இன்று காணப்பட்டுள்ள ஒத்துழைப்புச் சாதனைகள், இருதரப்பு அரசுகள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளின் விளைவாகும். இது, இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியதாக உள்ளது.

இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்துவரும் சீனா, பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பில் சீரான நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்குரிய விருப்பத்தையும் வெளிக்காட்டி வருகின்றது.

இன்றைய பொருளாதாரத்தின் உலகமயமாக்கலில், பல்வேறு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் சூழலில், முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வ பங்காற்று வருகின்றன என்பதில் ஐயமில்லை. இந்நிலையில், அன்னிய முதலீட்டாளர்களுக்குத் தொழில் புரிவதற்குரிய ஒரே மாதிரியான நியாயமான சூழலை உருவாக்குவது அவசியமானது.

இந்தச் சூழலில் சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு, இரு நாட்டு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நலன் தரும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை தொடர்ச்சியாக மேற்கொள்வதை எதிர்பார்க்கின்றோம்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com