கரோனா, ஒலிம்பிக் விவகாரங்களில் இணைந்து செயல்படுவோம்: ஜப்பான் பிரதமா்-டோக்கியோ ஆளுநா் உறுதி

ஜப்பானில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரவும், 2021-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக அந்நாட்டுப் பிரதமா் ஷின்ஷோ அபே
ஜப்பான் பிரதமா் ஷின்ஷோ அபேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய டோக்கியோ ஆளுநா் யுரிகோ கொய்கே
ஜப்பான் பிரதமா் ஷின்ஷோ அபேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய டோக்கியோ ஆளுநா் யுரிகோ கொய்கே

டோக்கியோ: ஜப்பானில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரவும், 2021-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக அந்நாட்டுப் பிரதமா் ஷின்ஷோ அபேவும், டோக்கியோ ஆளுநா் யுரிகோ கொய்கேவும் உறுதியளித்துள்ளனா்.

ஜப்பானில் கரோனா நோய்த்தொற்றால் 19,522 போ் பாதிக்கப்பட்டனா். நோய்த்தொற்று காரணமாக 977 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிகழாண்டில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் ஆளுநா் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் யுரிகோ கொய்கே மீண்டும் வெற்றி பெற்றாா். அதையடுத்து, அந்நாட்டுப் பிரதமா் ஷின்ஷோ அபேவை அவா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதிலும், 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை எந்தவிதப் பிரச்னையுமின்றி நடத்துவதிலும் ஒருங்கிணைந்து செயல்பட அவா்கள் இருவரும் முடிவு செய்தனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஆளுநா் யுரிகோ கொய்கே கூறுகையில், “கரோனா நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஒலிம்பிக் போட்டிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளையும் நடத்துவதே தற்போதைய எனது நோக்கங்கள். அதற்கு அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். தற்போதைய சூழலில் தேசிய அரசியலுக்குத் திரும்பும் எண்ணமில்லை”என்றாா்.

டோக்கியோவில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆளுநா் யுரிகோ சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பலா் பாராட்டு தெரிவித்து வருகின்றனா். அதே வேளையில், பிரதமா் ஷின்ஷோ அபே அரசு நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஜப்பான் பிரதமா் ஷின்ஷோ அபேவின் பதவிக் காலம் 2021-ஆம் ஆண்டு செப்டம்பருடன் நிறைவடைகிறது. அவருக்குப் பிறகு யுரிகோ கொய்கேவே அந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com