சீனாவில் எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சி

நியே மிங்சுயே என்பவர், சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள குய்யாங் நகரில் பொருள் அனுப்பும் பணியாளராக வேலை செய்கிறார்.
சீனாவில் எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சி

நியே மிங்சுயே என்பவர், சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள குய்யாங் நகரில் பொருள் அனுப்பும் பணியாளராக வேலை செய்கிறார்.

அவர் இணையத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை அனுப்புவதன் மூலம் சராசரியாக திங்களுக்கு 10 ஆயிரம் யுவான்(ஒரு இலட்சம் ரூபாய்)வருமானம் ஈட்டி வருகின்றார். சீனாவின் 200க்கும் மேலான நகரங்களில் உள்ள இத்தகைய பணியாளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர்கள் வறுமையான பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சீனாவின் எண்ணியல் பொருளாதார வளர்ச்சியை இது வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 10க்கும் மேலான ஆண்டுகளாக, சீனாவின் எண்ணியல் பொருளாதாரம் உயர்வேகத்தில் வளர்த்து வருகிறது. இதன் காரணமாக அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சீனத் தகவல் தொலை தொடர்பு ஆய்வகம் புதிதாக வெளியிட்ட சீனாவின் எண்ணியல் பொருளாதார வளர்ச்சிக்கான வெள்ளை அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில்  சீனாவின் எண்ணியல் பொருளாதார அதிகரிப்பு மதிப்பு 35 லட்சத்து 80 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. சீனப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றும் மைய ஆற்றலாக இது விளங்கியுள்ளது.

சேவைத் துறையில் எண்ணியல் பொருளாதார வளர்ச்சி முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக, மின்னணு வணிகம், பகிர்வுப் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் உயர்வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன.

சீனாவில் எண்ணியல் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைவதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, சீனச் சந்தை மிகவும் பெரியது. அத்துடன், சந்தை உள்ளார்ந்த ஆற்றல் மிக்கது. இரண்டாவதாக, 5-ஜி, பெருந்தரவு, மேகக் கணிமை, தொகுதி சங்கிலி உள்ளிட்ட தொழில் துறைகள், எண்ணியல் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையை உருவாக்கியுள்ளன. மூன்றாவதாக, கடந்த சில ஆண்டுகளில் புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக சீன அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், எண்ணியல் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமை மிக்க ஆதரவை அளித்து வருகின்றன.

எண்ணியல் பொருளாதாரம், சீனப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாகத் தொடர்ந்து திகழும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், சீனாவின் எண்ணியல் பொருளாதார வளர்ச்சிக்கான அனுபவம் உலகப் பொருளாதார மீட்சிக்கு பயனளிக்கும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com