சீன-இந்திய எல்லை விவகாரம் நிதானமாக உள்ளது: சௌ லி சியான்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சௌ லி சியான் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர்..
சீன-இந்திய எல்லை விவகாரம் நிதானமாக உள்ளது: சௌ லி சியான்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சௌ லி சியான் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

தற்போது, சீன-இந்திய உய்ர அதிகாரிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் படி, இரு நாட்டு எல்லை படைகள் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட தொடர்புடைய பிரதேசங்களில் பயன்தரும் முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மோதல் போக்கைத் தடுத்துள்ளன என்றார்.

தற்போது, சீன-இந்திய எல்லை நிலைமை நிதானமாக உள்ளது. ராணுவ மற்றும் தூதாண்மை வழிமுறையின் மூலம் இரு தரப்பு பரிமாற்றம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சீனாவுடன் இணைந்து, இரு தரப்பும் உருவாக்கிய உடன்படிக்கையை இந்தியா செயல்படுத்தி, எல்லை பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக சௌ லி சியான் கூறினார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com