கடத்தல்காரர்கள் ஒப்படைப்பு ஒப்பந்தம் பிரிட்டன் நிறுத்தம்

சீனாவின் ஹாங்காங்குடனான கடத்தல்காரர்கள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தைப் உடனடியாக நிறுத்தும் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ராப் 20ஆம் நாள்

சீனாவின் ஹாங்காங்குடனான கடத்தல்காரர்கள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தைப் உடனடியாக நிறுத்தும் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ராப் 20ஆம் நாள் நாடாளுமன்றத்தின் கீழவையில் அறிவித்தார். இச்செயல் சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் செயல் என்று பன்னாட்டு நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரிப்பைன் ஸ்டார் என்ற செய்தித்தாள் வெளியிட்ட ஒரு கட்டுரையில், சீன-பிரிட்டன் கூட்டறிக்கையைக் கைவிட்ட பிரிட்டன் அரசு, இச்செயலால் இரு நாட்டுறவுக்குத் தீங்கு விளைவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச விவகார ஆணையத் தலைவர் ச்சோதுரி இது குறித்து கூறுகையில், சீன உள்விவகாரத்தில் பிரிட்டன் தலையிட்டுள்ளது, சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டை மீறியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் ஆசியப் புத்தாக்க ஆய்வு மையத் தலைவர் பம்பாங் சூர்யோனொ கூறுகையில், பிரிட்டனின் தூதாண்மை செயல் அமெரிக்காவைப் பின்பற்றும் விதம் உள்ளது. இதனால் பிரிட்டன் தனது சொந்த நிலைப்பாட்டை இழந்து விட்டது என்று தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com