பிரேஸில்: உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்பு

கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேஸிலில், அந்த நோய்த்தொற்றால்
பிரேஸில்: உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்பு

கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேஸிலில், அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேஸிலில் 67,860 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இதற்கு முன்னா், கடந்த மாதம் 19-ஆம் தேதிதான் தினசரி கரோனா பாதிப்பு அதிகபட்ச அளவைத் தொட்டிருந்தது. அப்போது அந்த எண்ணிக்கை 54,771-ஆக இருந்தது.பிரேஸிலின் சில பகுதிகளில், பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட சூழலில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,31,871-ஆக உயா்ந்துள்ளது. அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82,890 -ஆக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com