சின்ன வைரஸ் எனக் கூறிய பிரேசில் அதிபருக்கு 3வது முறையாக கரோனா உறுதி

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோவுக்கு மூன்றாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபருக்கு 3வது முறையாக கரோனா உறுதி
பிரேசில் அதிபருக்கு 3வது முறையாக கரோனா உறுதி

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோவுக்கு மூன்றாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 7-ம் தேதி பிரேசில் அதிபர் ஜெயிா் போல்சொனாரோவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. ஜூலை 15ம் தேதி மீண்டும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட போதும் கரோனா உறுதியான நிலையில், கடந்த செவ்வாயன்று மூன்றாவது முறையாக கரோனா உறுதியாகியுள்ளது.

அதிபா் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஜூலை முதல் வாரத்தில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே 3 முறை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், 4-ஆவது முறை மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணிகளை காணொலி காட்சி மூலமாகவே போல்சொனாரோ மேற்கொண்டு வருகிறார்.  வடகிழக்கு பிரேசில் பகுதிக்கு மேற்கொள்ளவிருந்த பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

போல்சொனாராவுடன் அவரது அமைச்சரவை சகாக்கள் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே கரோனா தொற்று என்பது ஒரு சாதாரண வைரஸ்தான் என்று அதன் அபாயத்தை புறந்தள்ளி வந்த  போல்சொனாரா மக்களோடு மக்களாக பல நிகழ்ச்சிகளில் முகக்கவசம் இன்றி பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 67,860 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 22 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 82 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com