கசகஸ்தானில் உள்ள அமெரிக்காவின் உயிரியல் ஆய்வகம்: வைரஸ் வெடிகுண்டாக மாறும் அபாயம்

கசகஸ்தானில் அண்மையில் “காரணம் தெரியாத நுரையீரல் நோயின்” பாதிப்பின் காரணமாக பலர் உயிரிழந்தனர்.
கசகஸ்தானில் உள்ள அமெரிக்காவின் உயிரியல் ஆய்வகம்: வைரஸ் வெடிகுண்டாக மாறும் அபாயம்

கசகஸ்தானில் அண்மையில் “காரணம் தெரியாத நுரையீரல் நோயின்” பாதிப்பின் காரணமாக பலர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு விகிதம், புதிய ரக கரோனா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்பு விகிதத்தை விட அதிகமாகும். ஆனால், ஆசிய-ஐரோப்பிய கண்டத்தின் ஆழமான பகுதியில் அமைந்துள்ள  கசகஸ்தானின் நிலப்பரப்பு ஒப்பீட்டளவில் மிக நெருக்கமான ஒன்றாகும். இப்பகுதியில் அண்மையில் திடீரென நிகழ்ந்த “காரணம் தெரியாத நுரையீரல் நோயின் காரணமாக, அந்நாட்டில் உள்ள அமெரிக்கப்படை உயிரியல் ஆய்வகத்தின் மீது  மீண்டும் மக்களின்  கவனம் பதிந்துள்ளது. 

கசகஸ்தானின் அல்மாட்டியிலுள்ள அமெரிக்காவின் உயிரியல் ஆய்வகம், 2010ஆம் ஆண்டு அமெரிக்கா 6 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் கட்டியமைத்த ஆய்வகமாகும். அறிவியல் ஆய்வு, மிகவும் ஆபத்தான வைரஸ்களைச் பாதுகாத்து வைப்பதற்குரிய திறன்களை இந்த ஆய்வகம் கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. 

இதனிடையில், ரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் மற்றும் வானொலியின்  தகவலின்படி உக்ரைன், ஜார்ஜியா, ஆர்மீனியா, கசகஸ்தான், ஆப்கானிஸ்தான் முதலிய உலகின் பல நாடுகளில் அமெரிக்கா மொத்தமாக 200க்கும் மேலான உயிரியல் ஆய்வு மையங்களை நிறுவியுள்ளதென தெரியவந்துள்ளது. 

முன்னதாக, கசகஸ்தானின் ஸடான்ராடர் இணையதளம் 11ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில், கசகஸ்தான் வைரஸ் ஆய்வு மேற்கொள்வதற்குரிய இடமாக மாறியுள்ளது என்றும் இவ்வாய்வகமானது ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளின் அருகில் உள்ளது. எனவே, உள்நோக்கத்துடனோ அல்லது விபத்தினால் ஏதேனும் கசிவுகள் ஏற்பட்டாலோ இந்த ஆய்வகத்தில் உள்ள வைரஸ்கள் அருகிலுள்ள நாடுகளில் விரைவாகப் பரவும் என்றும் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரிய சக்கரோவா கருத்து தெரிவிக்கையில்,  அமெரிக்கா பிற நாடுகளில் அமைத்துள்ள உயிரியல் ஆய்வகங்களில் இராணுவ நோக்கத்துடன் கூடிய வைரஸ் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார். 

கியூபாவின் கூபாசி என்னும் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, பிற நாடுகளின் மீது தாக்குதல் நடத்த விரும்புகிறது என்றும் கடந்த 60 ஆண்டுகளில் அமெரிக்கா பலமுறை வைரஸ்களைப் பயன்படுத்தி, கியூபாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com