ஏஐஐபி வங்கியின் 5ஆவது செயற்குழுவின் ஆண்டுக் கூட்டத்தில் ஷி ஜின்பிங் உரை

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 5ஆவது செயற்குழுவின் ஆண்டுக் கூட்டம்..
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 5ஆவது செயற்குழு கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உரை
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 5ஆவது செயற்குழு கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உரை

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 5ஆவது செயற்குழுவின் ஆண்டுக் கூட்டம் ஜுலை 28ஆம் நாள் காணொலி வழியாகத் துவங்கியது. இக்கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் உரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்துக்கு வாழ்த்துகளையும் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் வளர்ச்சிக்குப் பாராட்டையும் தெரிவித்ததோடு, உறுப்பினர்களின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய புதிய மேடையாக இவ்வங்கி மாற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு உறுப்பினர்கள் கூட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, புத்தாக்கம் மற்றும் திறந்த மனதுடன், இவ்வங்கியை உலகின் கூட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் புதிய ரக பலதரப்பு வங்கியாகவும் சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய முன்மாதிரியாகவும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பலதரப்புவாதத்தை சீனா எப்போதுமே ஆதரித்து செயல்படுத்தி வருகிறது. திறப்பு, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை கொண்ட சிந்தனையின்படி பல்வேறு உறுப்பினர்களுடன் இணைந்து அறைகூவல்களைச் சமாளிப்பதற்காகவும் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்காகவும் மேலும் பெரும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

மனிதச் சமூகம் இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொது சமூகமாகும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து, ஒற்றுமையுடன் ஒத்துழைப்பதே நெருக்கடியைத் தோற்கடிக்கும் சரியான வழிமுறையாகும் என்பதை புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டம் காட்டியுள்ளது.

பொருளாதாரத்தின் உலகமயமாக்கலில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில், அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய உலக மேலாண்மை, மேலும் பெரும் பயனுள்ள பலதரப்பு அமைப்புமுறை, மேலும் ஆக்கப்பூர்வமான பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பல்வேறு நாடுகள் முயற்சியுடன் உருவாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com