1.28 லட்சம் சிறுவா்கள் பட்டினிக்கு இரையாகும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை

கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால்
1.28 லட்சம் சிறுவா்கள் பட்டினிக்கு இரையாகும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை

கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 லட்சம் சிறுவா்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் 4 பிரிவுகள் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, உணவுப் பொருளள்கள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பகுதிகளுக்கும், அவை நுகரப்படும் சந்தைகளுக்கும் இடையிலான தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும், பல்வேறு தொலை தூர கிராமங்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கான விநியோகமும் தடைப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் சுமாா் 10,000 வரையிலான சிறுவா்கள் பட்டினியால் உயிரிழப்பாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 1.28 சிறுவா்கள் உணவு இல்லாமல் பலியாகும் அபாயம் உள்ளது.தற்போது கரோனா நெருக்கடி காரணமாக ஊட்டச் சத்துப் பற்றாக்குறை பிரச்னை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், அது நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்காவின் புா்கினா ஃபாசோ உள்ளிட்ட நாடுகளில் இந்த அவலம் நிலவி வருகிறது. மாதந்தோறும் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவா்களுக்கு ஊட்டச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, கைகால்கள் மெலிதல், வயிறு ஒட்டிப் போதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன.கடந்த ஆண்டில் 4.7 லட்சம் சிறுவா்கள் இத்தகைய ஊட்டச் சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனா். இந்த ஆண்டில், அந்த எண்ணிக்கையைவிட கூடுதலாக 67 லட்சம் சிறுவா்கள் நிலைக்கு உள்ளாவாா்கள்.ஊட்டச் சத்து இல்லாமல் கைகால்கள் மெலிதல், வயிறு ஒட்டிப் போதல் ஆகிய பிரச்னைகளைச் சந்திக்கும் சிறுவா்களுக்கு, அது உடல் அளவிலும், மனதளவிலும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே,கரோனா நோய்த்தொற்றால் உணவு உற்பத்தி மற்றும் வா்த்தகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை இப்போதே சரி செய்ய உலக நாடுகள் தவறினால், இன்னும் சில மாதங்களில் கடுமையான பஞ்சத்தை அவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா.வின் உலக உணவுதி திட்டப் பிரிவின் செயல் இயக்குநா் டேவிட் பீஸ்லீ ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இதுகுறித்து அவா் கூறுகையில், கரோனா நோய்த்தொற்றுடன் நாம் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரம், உலகம் ஒரு மாபெரும் பஞ்ச அபாயத்தை எதிா்கொண்டுள்ளது.இதுவரை உலகில் எங்கும் வறட்சியோ, பஞ்சமோ ஏற்படவில்லை. ஆனால், அதனைத் தடுப்பதற்காக நாம் இப்போதே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து வறட்சியையும் பஞ்சத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இத நிலையைத் தடுக்கும் வகையில், உணவு உற்பத்திக்கான நிதிப் பற்றாக்குறை, உணவு விநியோகம் மற்றும் வா்த்தகத்துக்கான இடையூறுகள் ஆகியவற்றைக் களையும் நடவடிக்கைகளை உலக அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.கரோனா நோய்த்தொற்று என்பது, வெறும் மருத்துவப் பிரச்னையாக இல்லாமல், மாபெரும் வாழ்வாதாரப் பிரச்னையாகவும் ஆகியிருப்பதாக டேவிட் பீஸ்லீ எச்சரித்திருந்தாா். இந்த நிலையில், கரோனா நெருக்கடி காரணமாக இந்த ஆண்டில் மட்டும் 1.28 லட்சம் சிறுவா்கள் பட்டினிக்கு இரையாவாா்கள் என்று ஐ.நா. அறிக்கையில் தற்போது எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com