
Brazil's COVID-19 case tally up 40,000 in past day, death toll over 900
பிரேசிலில் புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 900க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் இறந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 40,816 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,483,191 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 921 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 88,539 ஆக உள்ளது.
திங்கள்கிழமை கரோனா பாதிப்பு பிரேசிலில் 23,284 ஆகவும், பலி எண்ணிக்கை 614 ஆகவும் குறைந்திருந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.