ஜோர்தானில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தை பலி; 700 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஜோர்தான் நாட்டின் தலைநகர் அம்மானின் வடமேற்கு பகுதியில்  கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தை பலியானது. 700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்டானில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தை பலி; 700 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஜோர்டானில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தை பலி; 700 பேர் மருத்துவமனையில் அனுமதி


அம்மான்: ஜோர்தான் நாட்டின் தலைநகர் அம்மானின் வடமேற்கு பகுதியில்  கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தை பலியானது. 700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்மான் மாவட்டம் இன் அல் பாஷா பகுதியில் உள்ள உணவகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழந்தது. அங்கு உணவு சாப்பிட்ட சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். சிலருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அந்த உணவகத்தில் இறைச்சிகளை குளிரூட்டும் அறை சரிவர செயல்படாததும், அதனால் உணவுப் பொருள்களில் ஏராளமான கிருமிகள் இருந்ததும், உணவு தயாரிப்பு உணவகத்துக்கு வெளியே திறந்தவெளியில் போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் நடந்து வந்ததும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com