
Pompeo's slander of China's ruling party is absurd
சீனாவின் உள்நாட்டு நிலைமை பாம்பியோவுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. சுய நலன்களுக்கு சீனாவின் ஆளும் கட்சி மீது அவர் அவதூறு பரப்பினார். அவரிந் கூற்று முழு சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட்டது.
உலக புகழ்பெற்ற பொது மக்கள் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, தொடர்ந்து பல ஆண்டுகளாக சீன அரசுக்கான மக்களின் ஆதரவு விகிதம் முதல் இடத்தில் உள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி கல்லூரியைச் சேர்ந்த 3 நிபுணர்கள் சீனாவில் 10க்கும் அதிகமான ஆண்டுகள் மேற்கொண்ட புலனாய்வு மூலம், சீன அரசுக்கு மக்களின் ஆதரவு விகிதம் 93 விழுக்காட்டை தாண்டியது என்று தெரிவித்தனர்.
நவ சீனா நிறுவப்பட்ட 70 ஆண்டுகளுக்குள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிந் தலைமையில், சீன மக்கள் மனம் ஒருமித்து கடினமாக உழைத்து, பல வளர்ச்சி சாதனைகளை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, புதிய ரக கரோனா வைரஸ் ஏற்பட்ட பின், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை எப்போதுமே முதலிடத்தில் வைத்துள்ளது. சீன எழுச்சி மீண்டும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கக் கூட்டுச் செய்தி நிறுவனம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பின் படி, அமெரிக்கா தவறான வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளதாக 80 விழுக்காட்டு அமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் மீது அவதூறு வரப்புவது அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் அற்றுவது என்பது அமெரிக்க அரசு மக்களின் ஆதரவை இழந்த உண்மையை மூடிமறைக்க முடியாது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்