பொருளாதாரத்தில் கரோனா வைரஸின் தாக்கத்தை இனிதான் உணர்வோம் : ஆய்வு நிறுவனம் தகவல்

கரோனா வைரஸால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின்  தாக்கத்தை இனிதான் உணரப் போகிறோம் என பொருளாதார ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
கரோனாவால் அதிகரிக்கும் பொருளாதார வீழ்ச்சி
கரோனாவால் அதிகரிக்கும் பொருளாதார வீழ்ச்சி

கரோனா வைரஸால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின்  தாக்கத்தை இனிதான் உணரப் போகிறோம் என பொருளாதார ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கித் தவித்து வருகின்றன. வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் ஆட்டம் கண்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பால் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சி குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் கணித்துள்ளது.

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சாத்தியமான வளர்ச்சி 1.9% இலிருந்து 1.4% ஆகவும், இங்கிலாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.6% இலிருந்து 0.9% ஆகவும், ஐரோப்பாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி  1.2% இலிருந்து 0.7% ஆகவும் இருக்கும் என ஃபிட்ச் கணித்துள்ளது.

மேலும் வளரும் நாடுகளில் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் வேலை நேரம் அதிகரிப்பு, வேலையின்மை, தொழில்முடக்கம் போன்றவற்றில் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவு நீண்டகால வேலையின்மையை அதிகரிக்கும் என்று ஃபிட்ச் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com