ட்சிங்காய்-திபெத் பீடபூமியில் உப்பு-கார சகிப்பு நெல் பயிரிட்டு சாதனை

உப்பு மற்றும் காரத்தன்மை கொண்ட நிலங்களில் வளரும்  நெல் வகை, முதன்முறையாக சீனாவின்..
ட்சிங்காய்-திபெத் பீடபூமியில் உப்பு-கார சகிப்பு நெல் பயிரிட்டு சாதனை

உப்பு மற்றும் காரத்தன்மை கொண்ட நிலங்களில் வளரும்  நெல் வகை, முதன்முறையாக சீனாவின் ட்சிங்காய்-திபெத் பீடபூமியின் கய்டம் பகுதியில் பயிரிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இத்தகைய நெல் முதன்முறையாக சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது. இது, ட்சிங்காய் மாநிலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும், அங்கு சாகுபடி நிலத்தை விரிவாக்குவதற்கும் துணை புரியும் என்று ட்சிங்காய் உப்பு-கார சகிப்பு நெல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

கலப்பின அரிசி வகைகளின் தந்தை என அழைக்கப்படும் யுவன் லொங்பிங்கின் தலைமையிலான குழுவினர் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சீனாவின் கிழக்கு மாநிலமான ஷன்டொங்கில் 3 நகரங்களிலும், ஷான்சி, ட்சிங்காய், சின்ஜியாங், உள்மங்கோலியா, ஹெய்லொங்ஜியாங், ஷேஜியாங் ஆகியவற்றின் 7 பகுதிகளிலும் இத்தகைய நெல் பயிரிடப்பட்டுள்ளது.

நீண்டகாலக் கணக்கில், சுமார் 164.7 லட்சம் ஏக்கர் பரப்பிலான உவர் நிலத்தை வேளாண்மைக்கு உகந்த நிலமாக மாற்றவும், இதன்மூலம் 8 கோடி பேருக்குத் தேவையான அரிசி உற்பத்தியை அதிகரிக்கவும் இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com