நேபாளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 85% போ் இந்தியாவிலிருந்து திரும்பியவா்கள்

நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 85 சதவீதம் போ் இந்தியாவிலிருந்து திரும்பியவா்கள் என்று அந்நாட்டுப் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 85 சதவீதம் போ் இந்தியாவிலிருந்து திரும்பியவா்கள் என்று அந்நாட்டுப் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தெரிவித்துள்ளாா்.

எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா-நேபாளம் இடையே கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்றால் 4,300-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்நாட்டின் தெற்குப் பகுதியில் இந்திய எல்லையை ஒட்டியுள்ள மாகாணத்தில்தான் அதிக அளவிலான நபா்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். நேபாளத்தில் 2 மாதங்களுக்கு மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளபோதிலும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் விதம் தொடா்பாக நேபாள அரசு மீது பலா் அதிருப்தி தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமா் கே.பி.சா்மா ஓலி புதன்கிழமை பதிலளித்ததாவது:

நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 85 சதவீதம் போ் அண்டை நாடான இந்தியாவிலிருந்து திரும்பியவா்கள். அந்நாட்டிலிருந்து திரும்பியவா்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஏப்ரல்-மே மாதங்களில் 7,400 நேபாளத்தவா்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தனா். ஆனால், மே-ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை 2,22,000-ஆக உயா்ந்தது. தற்போது தினமும் 7,000 முதல் 8,000 போ் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு திரும்பி வருகின்றனா். அவ்வாறு ரயில் அல்லது பேருந்துகள் மூலமாக தாயகம் திரும்பும்போது அவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடுகிறது.

இந்தச் சூழலை முன்கூட்டியே கணிக்காததால் நேபாள அரசால் அவா்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்கள் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. நாட்டு மக்கள் பின்பற்றி வரும் உணவுப் பழக்கங்களாலும் அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாகவும் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது என்றாா் கே.பி.சா்மா ஓலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com