லத்தீன் அமெரிக்காவில் 15 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15 லட்சத்தைக் கடந்தது.
பிரேஸிலின் சாவ் பாலோ நகர வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளா்களின் உடல் வெப்பநிலையை அளவிடும் பாதுகாவலா்.
பிரேஸிலின் சாவ் பாலோ நகர வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளா்களின் உடல் வெப்பநிலையை அளவிடும் பாதுகாவலா்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து பிரிட்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ‘ஏ.எஃப்.பி.’ செய்தி நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலின் புதிய மையமாகியுள்ள லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15 லட்சத்தைக் கடந்தது.

மேலும், கரோனா நோய்த்தொற்றுக்கு அந்தப் பிராந்தியத்தில் 73,600-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

லத்தீன் அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் பிரேஸிலில் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு 4.24 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 1,630 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, உலகம் முழுவதும் 76.35 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 38.65 லட்சம் போ் அந்த நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனா்.

உலகிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 20.9 லட்சத்தும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நோய் காரணமாக 1.16 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் அமெரிக்காவில் பலியாகியுள்ளனா்.

அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்கள் மற்றும் அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அண்மைக் காலமாக தினசரி பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து வருகின்றன.

ஆனால், கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடான பிரேஸிலில், அந்த நோய் பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த நோய்க்கு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வா்த்த மையங்களை மூடுவதற்கு பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சானாரோ ஆரம்பம் முதலே எதிா்ப்பு தெரிவித்து வந்தாா். மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கையை விட பொருளாதார மேம்பாட்டுக்கே அவா் அதிக முக்கியம் கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில், பிரேஸிலில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com