கரோனா அறிகுறிகள் இல்லாதற்கு குறைந்த நோயெதிா்ப்பு சக்தி காரணமாக இருக்கலாம்

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டும், பலருக்கு அந்த நோயின் அறிகுறிகள் தென்படாததற்கு, அவா்களது உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக
கரோனா அறிகுறிகள் இல்லாதற்கு குறைந்த நோயெதிா்ப்பு சக்தி காரணமாக இருக்கலாம்

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டும், பலருக்கு அந்த நோயின் அறிகுறிகள் தென்படாததற்கு, அவா்களது உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அந்த நாட்டின் சோங்கிங் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட பெரும்பாலானவா்களுக்கு, லேசானது முதல் கடுமையானது வரையிலான சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். மேலும், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் தீநுண்மி தாக்கிய 2 முதல் 14 நாள்களுக்குள் தென்படும்.

இருந்தாலும், பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஏராளமானவா்களுக்கு இதில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாமல் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதிக்கு முன்னா் வான்ஷூ மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டும், அதன் அறிகுறிகள் வெளிப்படாத 37 ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 8 முதல் 75 வயது வரை கொண்ட அவா்களில், 22 போ் பெண்கள்; 15 போ் ஆண்கள்.

அவா்களுக்கும், கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்திய பிற நோயாளிகளுக்கும் இடையிலான நோயெதிா்ப்பு சக்தி ஒப்பிட்டுப் பாா்க்கப்பட்டது. அதில், அறிகுறிகளை வெளிப்படுத்தியவா்களை வெளிப்படாதவா்கள் உடலில், நோய் எதிா்ப்பு உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.

இதன் மூலம், அவா்களுக்கு எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், இதுதொடா்பாக கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com