சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் தகுதி அமெரிக்காவுக்கு இல்லை

2020 உய்கூர் மனித உரிமை கொள்கை என்ற மசோதா 17ஆம் நாள் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் தகுதி அமெரிக்காவுக்கு இல்லை

2020 உய்கூர் மனித உரிமை கொள்கை என்ற மசோதா 17ஆம் நாள் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள மனித உரிமை நிலைமை குறித்து கடுமையாக அவதூறு கூறப்பட்டது. சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் இச்செயலுக்குச் சீனா வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சின்ச்சியாங்கிலுள்ள பிரச்சினை, தேசிய இனம், மதம், மனித உரிமை ஆகியவற்றுடன் தொடர்புடையதல்ல. மாறாக இது பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத்த்துடன் தொடர்புடையது. 1990ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இப்பிரதேசத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் ஆயிரத்தைத் தாண்டியுள்ளன. பயங்கரவாதத்தை நடவடிக்கைகளை ஒடுக்குவது சீனாவின் சட்ட விதிகளுக்குப் பொருந்தியது மட்டுமல்லாமல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒடுக்கும் பன்னாடுகளின் பொதுக் கருத்துக்கும் பொருந்தியதாகும். 

கடந்த 3 ஆண்டுகளில் சின்ச்சியாங்கில் பயங்கரவாதச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. 2019ஆம் ஆண்டு இப்பிரதேசத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு நாட்டின் சராசரி நிலைமையைத் தாண்டி 6.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அமெரிக்காவில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர் காவற்துறையின் அடக்குமுறையினால் உயிரிழந்ததால், அந்நாட்டில் பெரும் அளவிலான ஆர்பாட்டம் ஏற்பட்டு வருகின்றது. சொந்த நாட்டிலேயே மனித உரிமை பிரச்சினையைச் சமாளிக்கத் தவறிய அமெரிக்கா சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை.

சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com