சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங் உரை

கொவைட்-19 தொற்று நோயை ஒழிப்பது தொடர்பாக சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாடு ஜுன் 17ஆம் நாள் இணைய வழி நடைபெற்றது.
சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங் உரை

கொவைட்-19 தொற்று நோயை ஒழிப்பது தொடர்பாக சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாடு ஜுன் 17ஆம் நாள் இணைய வழி நடைபெற்றது.

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்,

திடீரென ஏற்பட்ட கொவைட்-19 நோய் தொற்று முழு உலகினைத் தாக்கியுள்ளது. இந்நோய் பாதிப்பால் இதுவரை இலட்சக்கணக்கான மக்கள்  உயிரிழந்தனர். சீனாவும் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது. எனினும் சீன மக்களின் அயரா முயற்சி மூலம் உள்நாட்டில் நோய் பரவலை பயன் தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மீண்டும் நோய் தொற்று பரவுவதால் தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகளும் மக்களும் வலுவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் பரவல் நிலைமையைத் தணிவு செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் சீனாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொவைட்-19 நோய் தடுப்புக்காக அவர் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

ஒன்று, நோய் தடுப்பில் இரு தரப்புகளும் மனவுறுதியுடன் ஒத்துழைக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சீனா தொடர்ந்து இயன்ற அளவில் உதவி செய்யும். தவிரவும், நோய் தடுப்பூசி ஆராய்ந்து வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்ட பிறகு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதலில் விநியோகிக்கப்படும் என்று ஷி ஜின்பிங் வாக்குறுதி அளித்தார்.

இரண்டு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை உறுதியாக முன்னேற்ற வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னெடுக்கும் அதேவேளையில், சுகாதாரம், உற்பத்தி மீட்சி, வாழ்வாதாரம் ஆகிய துறைகளுக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மூன்று, பலதரப்பு வாதத்தை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.

நான்கு, சீன-ஆப்பிரிக்க நட்புறவை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com