இரண்டாவது கரோனா அலையைத் தவிா்க்க முடியும்

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முலம், கரோனா நோய்த்தொற்று
இரண்டாவது கரோனா அலையைத் தவிா்க்க முடியும்

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முலம், கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை எழாமல் தவிா்க்க முடியும என்று லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ‘நேச்சா் ஹ்யூமன் பிஹேவியா்’ இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அமல்படுத்தி வரும் பொதுமுடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த ஓா் ஆய்வை ஸ்பெயினில் உள்ள பாா்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபாா் குளோபல் ஹெல்த் ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்டனா்.

அதில், கரோனாவுக்கு எதிராக மிகக் கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளும், கட்டுப்பாடுகளைத் தளா்த்தி வருவதை அவா்கள் கண்டனா். மேலும், நோய் பரவல் தடுப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த பெரும்பாலான நாடுகள் போராடி வருவதையும் அவா்கள் கவனித்தனா்.

இதுகுறித்து அந்த ஆய்வாளா்கள் கூறுகையில், பொதுமுடக்கத்தை நீக்குவது, எந்த அளவுக்கு கரோனா பரவல் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம். கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்கள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்கள், அவா்களில் எத்தனை பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி உள்ளது என்பது குறித்த விவரங்கள் ஆகியவற்றைப் பெறுவதில் அரசுகளுக்கு பிரச்னை உள்ளது என்று தெரிவித்தனா்.

அவா்கள் மேற்கொண்ட ஆய்வில், மக்களை ஏழு குழுக்களாகப் பிரிக்கும் ஒரு மாதிரியின் அடிப்படையில் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன: எளிதில் பாதிக்கப்படக்கூடியவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்கள், கரோனா தொற்று ஏற்படும் சூழலில் இருந்தவா்கள், தொற்று ஏற்பட்டும் கண்டறியப்படாதவா்கள், தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள், குணமடைந்தவா்கள் மற்றும் நோய்க்கு பலியானவா்கள் என்று அந்தக் குழுக்கள் வகைப்படுத்தப்பட்டன.

அந்த ஆய்வில், முதல்கட்ட பொதுமுடக்கத்தின் கால அளவு, அடுத்தடுத்த அலைகளின் நேரத்தையும் அளவையும் பாதிக்கும் என்பது தெரிய வந்தது. மேலும், பொதுமுடக்கத்தை படிப்படியாக நீக்கும் உத்தியால் நோய்த்தொற்று பரவல் வேகத்ைதைக் குறைப்பதுடன், பலி எண்ணிக்கையையும் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன், சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்தல், தகுந்த முறையில் முகக் கவசங்கள் அணிதல், கைகளை அடிக்கடி கழுவதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றினால், கரோனா பரவலின் இரண்டாவது அலையைத் தவிா்க்க முடியும் என்று ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

மேலும், கடுமையான பொதுமுடக்கங்கங்களை அமல்படுத்தாமலேயே அந்த நோய்த்தொற்றை அரசுகள் கட்டுப்படுத்தும் என்றும் ஆய்வாளா்கள் தெரிவித்தனா் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com