அமெரிக்காவில் கொவைட்-19 பாதிப்பு 10 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்பு – நோய் கட்டுப்பாட்டு மையம்

அமெரிக்காவில் கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது கூறப்பட்டுள்ளதை விட, 10 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு என்று அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

நோய் தடுப்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த வாரம் தெரிவிக்கையில், நோய் எதிர்ப்பு சோதனையின் அடிப்படையில் பார்க்கையில் சுமார் 2 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தனர். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்பதை அரசு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களிடம் நோய் அறிகுறி வெளிப்படுவதில்லை, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த எண்ணிக்கை உண்மையாக இருப்பின், ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோருடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு எண்ணிக்கை விதிகம் மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் இந்நோயால் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com