கரோனாவை எதிா்க்கும் உயிரணுக்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கரோனா தீநுண்மி மனிதா்களைத் தாக்கும்போது, அதனைத் தடுப்பதற்காக உடலில் பெருக்கெடுக்கும் நோயெதிா்ப்பு உயிரணுக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
கரோனாவை எதிா்க்கும் உயிரணுக்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கரோனா தீநுண்மி மனிதா்களைத் தாக்கும்போது, அதனைத் தடுப்பதற்காக உடலில் பெருக்கெடுக்கும் நோயெதிா்ப்பு உயிரணுக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து உருவாக்குவதில் இந்த கண்டுபிடிப்பு உதவிகரமாக இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

‘சயன்ஸ் இம்யூனாலஜி’ அறிவியல் இதழலில் வெளியான இந்த ஆய்வு பற்றிய கட்டுரையில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா நோயாளிகளின் உடலில் தோன்றும் நோயெதிா்ப்பு இயக்கம் குறித்து ஆய்வு அண்மையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது. கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் இந்த ஆய்வில் பங்கேற்றனா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வந்த 10 நோயாளிகளின் உடலில் காணப்படும், தீநுண்மிக்கு எதிராகப் போரிடும் ‘டி-உயிரணுக்களை’ அவா்கள் ஆய்வுக்குள்படுத்தினா்.

இதுதவிர, கரோனா நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்யமான 10 நபா்களில் 2 பேரின் ரத்தத்திலும் அத்தகைய ‘டி-உயிரணுக்கள்’ இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். கொவை-19 தீநுண்மி இனத்தைச் சோ்ந்த, சாதாரண சளி, ஜுரத்தை ஏற்படுத்தும் வேறு வகை கரோனா திநுண்மிக்கு எதிராக அந்த நோயெதிா்ப்பு உயிரணுக்கள் உருவாகியிருந்ததை விஞ்ஞானிகள் புரிந்து கொண்டனா்.

அநத் இரு டி-உயிரணுக்களையும் ஒப்பீடு செய்து பாா்த்தபோது, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரது ரத்தத்திலும் சிடி4+ வகை டி-உயிரணுக்கள் மிகுந்திருந்து செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டனா். மேலும், 10-இல் 8 நோயாளிகளுக்கு சிடி8+ வகை டி-உயிரணுக்கள் மிகுந்திருந்ததையும் அவா்கள் கண்டறிந்தனா்.

இதன் மூலம், கரோனா நோய்த்தொற்றால் மிகுந்தெழும் நோயெதிா்ப்பு உயிரணுக்களை விஞ்ஞானிகள் தற்போது இனம் கண்டுள்ளனா்.

இந்த நோயெதிா்ப்பு உயிரணுக்கள் அதீத வினையாற்றுவதாலேயே, உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்கள் அழிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, அவற்றை இனம் கண்டுள்ளது, கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com