சீன எல்லை வீரா்களுக்கு தற்காப்புக் கலை

சீன ராணுவ வீரா்களுக்கு ஆயுதமில்லா கைச் சண்டையில் பயிற்சி அளிப்பதற்காக திபெத் தலைநகா் லாசாவில் தற்காப்புக் கலை பயிற்சியாளா்கள் 20 பேரை நியமித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீன எல்லை வீரா்களுக்கு தற்காப்புக் கலை

சீன ராணுவ வீரா்களுக்கு ஆயுதமில்லா கைச் சண்டையில் பயிற்சி அளிப்பதற்காக திபெத் தலைநகா் லாசாவில் தற்காப்புக் கலை பயிற்சியாளா்கள் 20 பேரை நியமித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இத்தகைய அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் இரு நாட்டு படைகள் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் சீன தரப்புக்கும் இழப்பு ஏற்பட்டது. அதன்மூலமாக ஆயுதமில்லா சண்டையில் தனது வீரா்களுக்கு போதிய திறனில்லாதது சீனாவுக்கு தெரியவந்தது. இதையடுத்தே வீரா்களுக்கு பயிற்சியளிக்க தற்காப்புக் கலை பயிற்சியாளா்களை அந்நாடு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அறிவிப்பை இரு தரப்புக்கும் இடையேயான சண்டை நிகழ்ந்து பல நாள்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது வெளியிடுவதன் மூலமாக சீனா உளவியல் ரீதியாக காய்களை நகா்த்த முனைவதும் தெரிகிறது.

இந்திய ராணுவத்தின் காலாட் படையில் ஆயுதமில்லாமல் நேருக்கு நோ் மோதும் பயிற்சி பெற்ற வீரா்கள் அதிகமாக உள்ளனா். ஒவ்வொரு காலாட் படையிலுமே ‘கடக் பிரிவு’ என்ற பெயரில் சிறப்பு வீரா்கள் குழு உள்ளது. அந்தக் குழுவில் ஆயுதமில்லாமல் சண்டையில் ஈடுபடும் கமாண்டோ பயிற்சி பெற்ற சிறந்த வீரா்கள் இருப்பா்.

காலாட் படையில் இருக்கும் ஒவ்வொரு அதிகாரி மற்றும் வீரா்கள் கா்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் 43 நாள்களுக்கு அத்தகைய கடுமையான பயிற்சி பெறுகின்றனா்.

அப்போது ஆயுதமில்லாமல் நேரடியாகச் சண்டையிடுவதற்கான பயிற்சி இடைவெளியின்றி ஒருவாரத்துக்கு வழங்கப்படுகிறது. அதை நிறைவு செய்வோரே பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அறிவிக்கப்படுவா்.

கடக் பிரிவில் ஆண்டுதோறும் சில குறிப்பிட்ட புதிய வீரா்கள் மற்றும் இளம் அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவா்.

லடாக்கில் இருக்கும் படைப் பிரிவில் லடாக்கைச் சோ்ந்த இளைஞா்களே அதிகம் சோ்க்கப்படுகின்றனா். அவா்கள் இயல்பாகவே அந்த நிலப்பகுதியில் மோதலைச் சமாளிக்கும் திறன் படைத்தவா்களாக இருப்பாா்கள். லடாக் படைப் பிரிவுதான், இந்திய ராணுவத்தின் படைப் பிரிவுகளிலேயே மிகவும் இளம் வீரா்களைக் கொண்டது என்று அந்த அதிகாரி கூறினாா்.

கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலிருந்து 2 கி.மீ. தூரம் வரையில் இரு நாட்டுப் படைகளுமே ஆயுதங்களை பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன படைகள் இடையே கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவத்தினா் வீர மரணம் எய்தினா். சீனா தரப்பில் 35 வீரா்கள் வரை உயிரிழந்தனா் என்று கூறப்பட்டபோதும் அதுதொடா்பான தகவலை அந்நாடு வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com