சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பும் குறிக்கோளும்

2020ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 99ஆவது ஆண்டு நிறைவு ஆகும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பும் குறிக்கோளும்

2020ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 99ஆவது ஆண்டு நிறைவு ஆகும். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில்  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி புத்துயிர் பெற்று வருகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங், கட்சியாளர்களின் ஆரம்பக்காலக் கனவுகளையும் குறிக்கோளையும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் ஷி ஜின்பிங் பேசுகையில், 

ஆரம்பக் காலக் கனவை மறக்காமல் இருந்தால் தான், இறுதி இலக்குகளை நனவாக்க முடியும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாளர்களின் ஆரம்பக்கால கனவு மற்றும் குறிக்கோள், சீன மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துவதாகவும், சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியை அடைவதாகாவும் உள்ளது. இந்த குறிக்கோள்,  கட்சியாளர்கள் முன்னேறிச் செல்லும் உந்து சக்தியாகும் என்று தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட்சி கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டிற்குப் பிறகு, ஷிச்சின்பிங், பல மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலுள்ள வறிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, 6 ஆண்டுகளாக வறுமை ஒழிப்புப் பணிக் கூட்டத்தை நடத்தி,  தொடர்புடைய பணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

2020ஆம் ஆண்டு, தற்போதைய வரையறையின்படி, சீனக் கிராமப் புறங்களிலுள்ள மக்கள் அனைவரையும், வறிய நிலையில் இருந்து விடுவிப்பதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. கொவைட்-19 தொற்று நோய் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்திய போதிலும்,  இந்த இலக்கு திட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

நாடளவில் கூட்டாக முயற்சிகளை எடுக்கும் அடிப்படையில், வறுமை ஒழிப்புப் பணியை மேற்கொள்ளும் விதமாக, அனைவரும் வளர்ச்சி உரிமைகளை பெறுவதை உறுதி செய்வதாகும் என கருதப்படுகிறது.

2020ஆம் ஆண்டு, கொவைட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், மக்களின் நலன் முதன்மை என்ற குறிக்கோளைப் சீனா பின்பற்றி வருகிறது. மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை முதலிடத்தில் வைக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

அதன்படி, சீனா மிக சிறந்த மருத்துவர்களையும் மிக தரமான மருத்துவ உபகாரணங்களையும் ஒன்று திரட்டி, இந்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உயிர் மற்றும் வளர்ச்சி உரிமைகள் என்ற கோணத்தில் இருந்து பார்த்தால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக் கண்ணோட்டமும் ஞானங்களும் உலகிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது.

மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் கூறியதாவது: 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேர், மக்களிடம் இருந்து உருவாகியுள்ளது. எவ்வளவு அறைகூவல் மற்றும் அழுத்தங்களை எதிர்கொண்டாலும், மக்களை மையமாக கொண்டு வளர்ச்சிச் சிந்தனையைக் கடைப்பிடிப்பது எப்போதும் மாறாது என்று தெரிவித்தார்.

ஒரு கட்சியின் வளர்ச்சி,  ஒரு நாட்டின் மறுமலர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு உடையது. நிறுவப்பட்ட போது சிறிய கட்சியில் இருந்து இன்று பெரியதாக மாறி, 140 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டை ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அடுத்தடுத்து அறைகூவல்களில் இருந்து வளர்ந்து வருகிறது. 

எதிர்காலத்தில், வரலாறு மற்றும் மக்களுக்கு புதிய சிறந்த சாதனைகளை அளிக்க கட்சியாளர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com