சீனாவில் அழியும் நிலையில் விலங்குகள் மற்றும் தாவரங்கள்

ஐ.நாவின் 7வது உலகக் காட்டு விலங்கு மற்றும் தாவரத் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது. 
சீனாவில் அழியும் நிலையில் விலங்குகள் மற்றும் தாவரங்கள்

ஐ.நாவின் 7வது உலகக் காட்டு விலங்கு மற்றும் தாவரத் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக, அழியும் நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கும் பணியை சீனா ஒழுங்கான முறையில் நடத்தி வருகிறது. இதன் விளைவாக, ராட்சத பாண்டா, ஆசிய யானை, திபெத் மறிமான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் குறைந்து வரும் போக்கு மாற்றப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளி பணியகத்தைச் சேர்ந்த தொடர்புடைய பணியாளர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும், 11,800 இயற்கைப் பாதுகாப்பு மண்டலங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அழியும் அபாயத்திலுள்ள சில விலங்குகள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மிகச் செழுமையான உயிரினங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது. அழியும் அபாயத்திலுள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான பொது இணக்க உடன்படிக்கையில் சீனா 1981ஆம் ஆண்டு இணைந்தது  குறிப்பிடத்தக்கது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com