கரோனா வைரஸ் ஆய்வுப் பணி குறித்து ஷி ஜின்பிங் கள ஆய்வு 

சீனாவில் கரோனா வைரஸ் ஆய்வுப் பணி குறித்து ஷி ஜின்பிங் கள ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா வைரஸ் ஆய்வுப் பணி குறித்து ஷி ஜின்பிங் கள ஆய்வு 

சீனாவில் கரோனா வைரஸ் ஆய்வுப் பணி குறித்து ஷி ஜின்பிங் கள ஆய்வு மேற்கொண்டார். 

கடந்த மார்ச் 2ஆம் பிற்பகல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங், இராணுவ மருத்துவவியல் ஆய்வகம், ட்சின்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவவியல் கழகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று, கரோனா வைரஸ் தடுப்புக்கான அறிவியல் ஆய்வு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணியை கள ஆய்வு செய்தார்.

நோய் தடுப்பூசி, மருந்து வைரஸுக்கு எதிரான சோதனைப் பொருட்கள் ஆகியவற்றின் ஆய்வு மற்றும் பயன்பாடு குறித்த நிலையை ஷி ஜின்பிங் அறிந்துகொண்டார்.

அதோடு, நிபுணர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர் சந்தித்தார். கலந்தாய்வு கூட்டம் ஒன்றுக்கு ஷி ஜின்பிங் தலைமை தாங்கி, தொடர்புடைய வாரியங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com