
கரோனா வைரஸ் பரவலின் காரணமாக, ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 43வது கூட்டம் மார்ச் 13ஆம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், சின்ஜியாங் விவகாரம் பற்றி தொடர்புடைய நாடு தொடர்ந்து வேண்டுமென்றே பரப்புரை செய்து, சீனாவின் மீது பழி போட்டு வருகிறது.
2019ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் மனித உரிமை பற்றிய அறிக்கையை அமெரிக்கா அண்மையில் வெளியிட்டது. அதில், சீனாவில் மனித உரிமை நிலைமையின் மீதும், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துக்கான நிர்வாக கொள்கையின் மீதும் அமெரிக்கா மீண்டும் தீய நோக்கத்துடன் பழி போட்டுள்ளது. இந்தத் தவறான கருத்துக்களுக்கு ஆதாரம் ஏதுமில்லை. சின்ஜியாங்கில் பயங்கரவாத எதிர்ப்பில் தலையிட்டு, சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்வது தான், அமெரிக்காவின் நோக்கமாகும்.
சின்ஜியாங்கின் அதுஷ் நகரைச் சேர்ந்த மைதின்ஜியாங் ஈலிம் என்பவர், 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் கல்வி மற்றும் பயிற்சி மையத்திலிருந்து தேர்ச்சி பெற்றார். அங்கு தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்.
2019ஆம் ஆண்டு ஜூலை திங்கள், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த 28 உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 51 நாடுகள், ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் தலைவர் மற்றும் உயர்நிலை அதிகாரிக்குக் கூட்டாகக் கடிதம் ஒன்றை அனுப்பின. இக்கடிதத்தில் சின்ஜியாங்கில் சீனா மேற்கொண்டு வருகின்ற பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைக்கும், முஸ்லிம் மக்களின் மீதான சீன அரசின் அன்புக்கும் இந்நாடுகள் பாராட்டு தெரிவித்தன.
சின்ஜியாங்குடன் தொடர்புடைய பிரச்சினைகள், உரிமை, மதம், தேசிய இனம் ஆகிய பிரச்சினைகள் அல்ல. இது, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிரிவினைவாத எதிர்ப்புப் பிரச்சினையாகும் என்று உண்மைகள் நிரூபித்துள்ளன.
உலகளவில் முஸ்லிம்களுக்கு தடை பிறப்பித்துள்ள ஒரே ஒரு நாடு அமெரிக்கா. மேலும், பயங்கரவாத எதிர்ப்பைக் காரணமாகக் கொண்டு, ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் பதற்ற நிலையை ஏற்பட்டது. மேலும், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
திட்டத்தின்படி, ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் உயர்நிலை அதிகாரி பேச்லெட் அம்மையார் இவ்வாண்டு சின்ஜியாங்கில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது ஒரு நல்ல வாய்ப்பு. அவரின் இப்பயணத்துக்குப் பிறகு, உலகம் உண்மையான சின்ஜியாங்கை அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...